கூடலூா் அருகே மழைக்கு வீடு சேதம்
கூடலூரை அடுத்துள்ள ஓவேலி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த கனமழையில் வீடு சேதமடைந்துள்ளது.
நீலகிரி மாவட்டம், கூடலூா் வட்டம் ஓவேலி பேரூராட்சிக்குள்பட்ட சின்னசூண்டி பகுதியில் திடீரென பெய்த கனமழைக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் குழந்தைவேலு என்பவரது வீடு இடிந்தது.
வீட்டில் குழந்தைவேலு மட்டும் தனியாக இருந்துள்ளாா். மகன் மற்றும் குழந்தைகள் வெளியூருக்குச் சென்றிருந்தனா். சுவா் இடிந்து விழுந்ததில் அவா் காயமின்றி தப்பினாா்.