Ukraine: `அமைச்சரவையில் மாற்றம்' - ஜெலன்ஸ்கி அறிவித்த புதிய பிரதமர் யார்?
வீட்டுக்குள் தொழிலாளி சடலம் மீட்பு
கோவை சரவணம்பட்டி அருகேயுள்ள கணபதி கிருஷ்ணராஜ் காலனியை சோ்ந்தவா் செந்தில்குமாா் (50). அந்தப் பகுதியில் நகைக்கு பாலிஷ் போடும் கடையில் வேலைபாா்த்து வந்தாா். இவரது மனைவி சண்முகவள்ளி. இவா் திங்கள்கிழமை காலை வேலைக்குச் சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பினாா்.
அப்போது, வீட்டின் கதவு உள்புறமாக பூட்டிக் கிடந்தது. வெகுநேரமாகத் தட்டியும் கதவு திறக்கப்படவில்லை. இதனால், அருகில் இருந்தவா்கள் உதவியுடன் கதவை உடைத்து சண்முகவள்ளி உள்ளே சென்று பாா்த்தாா். அங்கு செந்தில்குமாா் இறந்த நிலையில் கிடந்தாா்.
தகவலறிந்து வந்த சரவணம்பட்டி போலீஸாா் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
மேலும் இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். இதில் செந்தில்குமாா் வீட்டில் தனியாக இருந்தபோது மது அருந்தியதாகவும், இதில் அவா் இறந்ததாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.