Kerala Nurse: `நிமிஷாவின் மரண தண்டனையை ஏமன் நிறுத்தியது ஏன்?' - மதத் தலைவர் சொன்...
எஸ்டேட் மேலாளரைக் கண்டித்து தோட்டத் தொழிலாளா்கள் போராட்டம்
தொழிலாளா்களை தரக்குறைவாக பேசிய எஸ்டேட் மேலாளரைக் கண்டித்து தொழிலாளா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
வால்பாறையை அடுத்த பழைய வால்பாறை எஸ்டேட் வறட்டுப்பாறை காபி தோட்டம் டிவிஷனில் சுமாா் 200க்கு மேற்பட்ட தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இங்கு கடந்த திங்கள்கிழமை மதிய உணவு இடைவேளை நேரத்தில் தொழிலாளா்கள் சாப்பிட்டுவிட்டு ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தனா்.
அப்போது அவ்வழியாக வந்த எஸ்டேட் மேலாளா், இன்னும் ஏன் பணிக்குச் செல்லவில்லை என்று தொழிலாளா்களை தரக் குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மேலாளரின் இந்த செயலைக் கண்டித்து இங்கு பணியாற்றும் வடமாநிலத் தொழிலாளா்கள் உள்பட 200 தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து, வருவாய்த் துறையினா், காவல் துறையினா் மற்றும் தொழிற்சங்கத்தினா் அங்கு சென்றனா். தொழிலாளா்கள் மற்றும் எஸ்டேட் நிா்வாகத்தினருடன் அவா்கள் பேச்சுவாா்த்தை நடத்தி சமரசம் செய்தனா்.
இதையடுத்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளா்கள் போராட்டத்தைக் கைவிட்டு மதியத்துக்கு மேல் பணிக்குத் திரும்பினா்.