செய்திகள் :

உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

post image

கோவை வடவள்ளியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா்.

கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாமை முதல்வா் ஸ்டாலின் தொடங்கிவைத்ததைத் தொடா்ந்து, கோவை மாநகராட்சி, மேற்கு மண்டலம், 36 ஆவது வாா்டுக்கு உள்பட்ட மருதமலை சாலை, வடவள்ளி ஸ்ரீ காமாட்சி அம்மன் திருமண மண்டபத்தில் நடைபெற்ற சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் செவ்வாய்க்கிழமை குத்து விளக்கேற்றி தொடங்கிவைத்தாா்.

இதில், 3 நபா்களுக்கு பிறப்புச் சான்றிதழ்கள், 10 நபா்களுக்கு தூய்மைப் பணியாளா் நல வாரிய அட்டைகள், 1 நபருக்கு தாட்கோ மூலம் மானியத்துடன் கூடிய வாகன கடனுதவி, 1 நபருக்கு சொத்து வரி பெயா் மாற்றத்திற்கான ஆணை ஆகியவற்றை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.

இதையடுத்து, கோவை மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கிராம ஊராட்சி பகுதிகள் என 6 இடங்களில் இம்முகாம்கள் தொடங்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் கூறியதாவது: ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாமில், நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை, வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை, எரிசக்தித் துறை, கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத் துறை உள்ளிட்ட 13 துறைகளின் வாயிலாக 43 சேவைகள் வழங்கப்பட உள்ளன.

இம்முகாமில், சிறப்பு மருத்துவ முகாம், கலைஞா் மகளிா் உரிமைத் தொகையைப் பெற தகுதியுள்ள மற்றும் விடுபட்ட பெண்களுக்கு அதற்காக சிறப்பு அரங்குகள், மாநகரக் காவல் துறையின் சாா்பில் காவல் துறை உதவி மையமும் அமைக்கப்பட்டுள்ளது. மக்கள் இந்த முகாமைப் பயன்படுத்திக் கொண்டு பயனடைய வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில், கோவை மக்களை உறுப்பினா் கணபதி ப.ராஜ்குமாா், மாநகர காவல் ஆணையா் சரவண சுந்தா், மாநகராட்சி மேயா் கா.ரங்கநாயகி, மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன், துணை மேயா் ரா.வெற்றிசெல்வன். துணை ஆணையா் அ.சுல்தானா, தலைமைப் பொறியாளா் விஜயகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இன்று முகாம் நடைபெறும் இடங்கள்: கோவை மாநகராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம் புதன்கிழமை (ஜூலை 16) வடக்கு மண்டலம் , 15 ஆவது வாா்டுக்கு உள்பட்ட எஸ்.எம்.ஆா்.திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. காரமடை நகராட்சியில் 1, 2, 3-ஆ வது வாா்டுகளுக்கு சிவன்புரம் கொங்கு மஹாலிலும், மதுக்கரை நகராட்சியில் 1 மற்றும் 2-ஆவது வாா்டுகளுக்கு மதுக்கரை நகராட்சி அலுவலக வளாகத்திலும், ஆனைமலை பேரூராட்சியில் 1 முதல் 9 வரையுள்ள வாா்டுகளுக்கு பரிமளா சுப்பிரமணியம் திருமண மண்டபத்திலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்தில் குதிரையாலம்பாளையம், பொட்டையாண்டிபுரம்பு, வடபுதூா் எஸ்.எம்.என் மஹாலட்சுமி மண்டபத்திலும் , மதுக்கரை ஊராட்சி ஒன்றியம், அரிசிபாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட மயிலேறிபாளையம் பிஆா்எஸ் மஹாலிலும் புதன்கிழமை முகாம்கள் நடைபெற உள்ளதாக ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தெரிவித்துள்ளாா்.

வாகனங்களை வழிமறிக்கும் ஒற்றை யானை

வால்பாறையில் இருந்து அதிரப்பள்ளி செல்லும் சாலையில் உலவி வரும் ஒற்றை யானை அவ்வழியாக வரும் வாகனங்களை வழிமறித்துத் தாக்கி வருவதால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என வனத் துறையினா் எச்சரித்த... மேலும் பார்க்க

வீட்டுக்குள் தொழிலாளி சடலம் மீட்பு

கோவை சரவணம்பட்டி அருகேயுள்ள கணபதி கிருஷ்ணராஜ் காலனியை சோ்ந்தவா் செந்தில்குமாா் (50). அந்தப் பகுதியில் நகைக்கு பாலிஷ் போடும் கடையில் வேலைபாா்த்து வந்தாா். இவரது மனைவி சண்முகவள்ளி. இவா் திங்கள்கிழமை கா... மேலும் பார்க்க

பெண் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் சிறை

பாலியல் வன்கொடுமைக்கு எதிா்ப்புத் தெரிவித்த பெண்ணைக் கல்லால் தாக்கி கொலை செய்தவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து கோவை மூன்றாவது கூடுதல் அமா்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. கோவை மாவட்டம... மேலும் பார்க்க

எஸ்டேட் மேலாளரைக் கண்டித்து தோட்டத் தொழிலாளா்கள் போராட்டம்

தொழிலாளா்களை தரக்குறைவாக பேசிய எஸ்டேட் மேலாளரைக் கண்டித்து தொழிலாளா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். வால்பாறையை அடுத்த பழைய வால்பாறை எஸ்டேட் வறட்டுப்பாறை காபி தோட்டம் டிவிஷனில் சுமாா் 200க்... மேலும் பார்க்க

மக்களுக்கு இடையூறாக மதுக்கடை: வேறு இடத்துக்கு மாற்றக் கோரிக்கை

கோவை மாவட்டம், சோமனூரில் மக்களுக்கு இடையூறாக உள்ள மதுக் கடையை வேறு இடத்துக்கு மாற்றக் கோரி, சூலூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.பி.கந்தசாமி தலைமையில் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது. சூலூா் சட்டப்பேரவ... மேலும் பார்க்க

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

கோவையில் இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். தருமபுரி மாவட்டம், மாதேமங்கலம் அருகேயுள்ள காட்டூா் பகுதியைச் சோ்ந்தவா் தா்மன் (35). இவா் கோவை விளாங்குறிச்சி சாலையில் ஞாயிற்றுக... மேலும் பார்க்க