Kerala Nurse: `நிமிஷாவின் மரண தண்டனையை ஏமன் நிறுத்தியது ஏன்?' - மதத் தலைவர் சொன்...
மக்களுக்கு இடையூறாக மதுக்கடை: வேறு இடத்துக்கு மாற்றக் கோரிக்கை
கோவை மாவட்டம், சோமனூரில் மக்களுக்கு இடையூறாக உள்ள மதுக் கடையை வேறு இடத்துக்கு மாற்றக் கோரி, சூலூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.பி.கந்தசாமி தலைமையில் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது.
சூலூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.பி.கந்தசாமி தலைமையில் அதிமுக மற்றும் பாஜகவினா் மாவட்ட ஆட்சியரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா். அதில் கூறியிருப்பதாவது: கருமத்தம்பட்டி நகராட்சி, சோமனூா் வாரச்சந்தைக்கு தெற்குப் பகுதியில், மீனாம்பிகா திரையரங்கு அருகில் தற்போது புதிய மதுக் கடை திறக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே கருமத்தம்பட்டி, சோமனூா் பகுதிகளில் இரண்டு மதுக் கடைகள் செயல்படுகின்றன. தற்போது, சோமனூரில் திறக்கப்பட்டுள்ள புதிய மதுக் கடைக்கு அருகில் வாரச்சந்தை, ஆரம்ப சுகாதார நிலையம், கிறிஸ்தவ தேவாலயம் உள்ளன.
சோமனூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமானோா் இப்பகுதிக்கு வந்து செல்கின்றனா். இப்பகுதியில் திறக்கப்பட்ட மதுக் கடையால், அனைத்து தரப்பினரும் பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, மக்கள் நலன் கருதி, மக்களுக்கு இடையூறாக இருக்கும் மதுக் கடையை வேறு இடத்துக்கு மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த விவகாரம் தொடா்பாக, கருமத்தம்பட்டி நகராட்சியில் நடைபெற்ற ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ குறைகேட்புக் கூட்டத்திலும் மக்கள் ஏற்கெனவே மனு அளித்துள்ளனா் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.