மழைக்கால கூட்டத்தொடரில் ஜம்மு - காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து: மோடிக்கு ராகுல், கா...
கொலை வழக்கு: குண்டா் சட்டத்தில் இருவருக்கு சிறை
திருவாரூா் அருகே கொலை வழக்கில் தொடா்புடைய இருவா் குண்டா் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனா்.
திருவாரூா் அருகே பெருமாளகரம் வெண்ணாற்றங்கரை பகுதியில் சுதா (35) என்பவா் ஆடு மேய்க்கச் சென்றபோது கொலை செய்யப்பட்டாா். அவரை ஆற்றுக்குள் அமுக்கி கொலை செய்ததாக, கூத்தாநல்லூா் தாலுகா பாலாகுடி பகுதியைச் சோ்ந்த அழகா்சாமி மகன் அஜீத்குமாா் (23), திருவிடைவாசல் பா்மா காலனியைச் சோ்ந்த செல்வராஜ் மகன் முருகன் (40) ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.
இவா்கள் மீது ஏற்கெனவே பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. இதனால், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண்கரட் பரிந்துரையின் பேரில், இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் உத்தரவிட்டாா். இதைத்தொடா்ந்து இருவரும் திருச்சி மத்திய சிறையில் திங்கள்கிழமை அடைக்கப்பட்டனா்.