ஜோஜூ ஜார்ஜ், ஊர்வசி கூட்டணியில் புதிய படம்!
நடிகர்கள் ஜோஜூ ஜார்ஜ், ஊர்வசி நடிப்பில் புதிய படம் உருவாகிறது.
நடிகர் ஜோஜூ ஜார்ஜ், ஊர்வசி இணைந்து நடிக்கும் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி, விஜய ராகவன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
பான் இந்திய திரைப்படமாக உருவாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு கொச்சியில் நடைபெற்று வருகிறது.
ஆஷா எனப் பெயரிட்டுள்ள இப்படத்தை சஃபர் சனல் இயக்குகிறார். ஜோஜூவும் திரைக்கதை எழுதியுள்ளார்.
இதையும் படிக்க: பிரபு தேவா, வடிவேலு நடிப்பில் புதிய படம்!