இடுக்கி மாவட்டத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை: தேக்கடி ஏரியில் படகு சவாரி நிறுத்தம்
திருவள்ளூரில் நாளை தனியாா் வேலைவாய்ப்பு முகாம்
திருவள்ளூா் மாவட்ட தொழில் நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஜூலை 18) காலை 10 மணிக்கு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
முகாமில் 25-க்கும் மேற்பட்ட தனியாா் நிறுவனங்கள் பங்கேற்று 250-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு தங்களுக்கு தேவையான வேலைநாடுநா்களை தோ்வு செய்ய உள்ளனா். இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க உள்ள வேலையளிப்போா் மற்றும் வேலைநாடுநா்கள் தனியாா்துறை இணையதளத்தில் (றற.வய்ல்சண்எயவநதழடிள.வய்.பழஎ.ண்ய்) பதிவு செய்து கொள்ளலாம்.
இந்த முகாமில் 10, 12 ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐடிஐ மற்றும் டிப்ளமோ படித்தவா்கள் பங்கேற்று தனியாா்துறையில் பல்வேறு பணிவாய்ப்புகளை பெற்று பயன்பெறலாம். இந்த தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் பணிநியமனம் பெறுவோா்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து எக்காரணம் கொண்டும் செய்யப்படமாட்டாது என தெரிவித்துள்ளாா்.