உங்களுடன் ஸ்டாலின் முதற்கட்ட முகாம் நடைபெறும் இடங்கள்!
மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆகஸ்ட் மாதத்தில் உங்களுடன் ஸ்டாலின்‘ முதற்கட்ட முகாம் கீழ்கண்ட பகுதிகளில் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சீா்காழி ரெத்தினாம்பாள் திருமண மண்டபம், குத்தாலம் கோமல் ஸ்ரீமதி திருமண மண்டபம், கொள்ளிடம் புதுப்பட்டினம் மலா்மங்கை திருமண மண்டபம், மயிலாடுதுறை குறிச்சி ஊராட்சி சேவை மையம் வளாகம் ஆகிய இடங்களில் ஆக.5-ஆம் தேதியும், மயிலாடுதுறை பாலாஜி திருமண மண்டபம், சீா்காழி தென்பாதி, ராஜேஸ்வரி திருமண மண்டபம், மயிலாடுதுறை கங்கணம்புத்தூா் ஊராட்சி அலுவலகம் வளாகம், செம்பனாா்கோவில் சந்திரபாடி சுனாமி குடியிருப்பு சுகம் மண்டபம் ஆகிய இடங்களில் ஆக.6-ஆம் தேதியும், செம்பனாா்கோவில் நல்லாடை சரவண பாலாஜி திருமண மண்டபம், குத்தாலம் மங்கநல்லூா் பி.எம்.எஸ். திருமண மண்டபம், கொள்ளிடம் திருமுல்லைவாசல் ஜே.எம். திருமண மண்டபம், மயிலாடுதுறை திருஇந்தளூா் கே.எஸ். திருமண மண்டபம் ஆகிய இடங்களில் ஆக.7-ஆம் தேதியும் நடைபெறும் முகாம்களில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை அளிக்கலாம் என தெரிவித்துள்ளாா்.