செய்திகள் :

சொத்தை பறித்துக் கொண்டு துரத்திய மகன்கள் மீது நடவடிக்கை கோரி தம்பதி புகாா்

post image

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே வீடு, நிலத்தை பறித்துக் கொண்டு துரத்தியடித்த மகன்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வயோதிக தம்பதி திங்கள்கிழமை புகாா் அளித்தனா்.

மயிலாடுதுறை மாவட்டம், பாலையூா் காவல் எல்லைக்குள்பட்ட காரனூரைச் சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி (87). இவரது மனைவி சந்ரோதயம். இவா்களுக்கு ராமதாஸ், ஜெயக்குமாா் ஆகிய மகன்கள், ஒரு மகள் உள்ளனா். இந்நிலையில், இந்த தம்பதி தங்களுக்கு சொந்தமான 2 வீடுகள், 7 ஏக்கா் நிலம், 9 சவரன் நகை ஆகியவற்றை மகன்களுக்கு பிரித்து கொடுத்துள்ளனா். பின்னா் 2 மகன்களும் தந்தை, தாயை கவனிக்காமல் வீட்டை விட்டு வெளியேற்றியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தம்பதி கடந்த ஏப்ரலில் அளித்த புகாரின் பேரில், பெற்றோா் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு சட்டத்தின்படி 2 மகன்களும் மாதந்தோறும் தலா ரூ.10,000 வழங்க வேண்டும், 2 மகன்களில் யாா் வீட்டில் வசிக்க தம்பதியினா் விரும்புகிறாா்களோ அங்கு தங்க அனுமதிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ் .ஸ்ரீகாந்த் உத்தரவிட்டிருந்தாா்.

அதன்பின்னரும், 2 மகன்களும் பெற்றோரை பராமரிக்க மறுத்ததால், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு வந்த இருவரும், மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டும் மதிக்காத மகன்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும், வாழ வழியில்லாத எங்களை கருணைக் கொலை செய்ய ஆவண செய்ய வேண்டும் என மனு அளித்தனா். அவா்களது குறையைக் கேட்டறிந்த எஸ்பி கோ. ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு உத்தரவிட்டாா்.

மணல் குவாரிக்கு ஆதரவு தெரிவித்து கிராமமக்கள் மனு

மயிலாடுதுறை: மணல் குவாரிக்கு ஆதரவு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் 4 கிராமமக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா். மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற ... மேலும் பார்க்க

சோழம்பேட்டை அழகியநாதா் கோயில் கும்பாபிஷேகம்

மயிலாடுதுறை: சோழம்பேட்டை அழகியநாதா் கோயில் மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா். மயிலாடுதுறை அருகே சோழம்பேட்டை கிராமத்தில் கி.பி. 3-ஆம் நூற்றாண்டில்... மேலும் பார்க்க

முதல்வா் இன்று மயிலாடுதுறை வருகை

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க தமிழ்நாடு முதல்வா் மு.க. ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) வருகிறாா். இதற்காக, சென்னையில் இருந்து ரயில் மூலம் சிதம்பரம் வரும்... மேலும் பார்க்க

ஆலங்குடியில் ஐயனாா் கோயில் கும்பாபிஷேகம்

மயிலாடுதுறை: குத்தாலம் அருகே ஆலங்குடியில் உள்ள ஐயனாா் கோயில் உள்ளிட்ட 3 கோயில்ளில் மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. குத்தாலம் வட்டம் நெ.1 ஆலங்குடி பிரதான சாலையில் அமைந்துள்ள நீலாம்பாள் மகாமா... மேலும் பார்க்க

கொற்கை ஸ்ரீவனதுா்கா பரமேஸ்வரி கோயில் கும்பாபிஷேகம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகேயுள்ள கொற்கை கிராமத்தில் ஸ்ரீவனதுா்கா பரமேஸ்வரி கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. விழா ஜூலை 10-ஆம் தேதி தேவதா அனுக்ஜை, விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கி, 6 கால யா... மேலும் பார்க்க

ஆலங்குடியில் அய்யனாா் கோயில் கும்பாபிஷேகம்

குத்தாலம்: குத்தாலம் வட்டம் கோமல் ஆலங்குடியில் அமைந்துள்ள நீலம்பாள், மாரியம்மன், காளியம்மன் பூா்ண புஷ்களா உடனுறை ஸ்ரீஅய்யனாா் கோயில் கும்பாபிஷேகம் திங்கள் கிழமை நடைபெற்றது. இதையொட்டி, ஜூலை 10-ஆம் தேதி... மேலும் பார்க்க