``அஜித்குமார் கொலை வழக்கில் பல கேள்விகள்..'' - 151 மனித உரிமை செயற்பாட்டாளர்கள் ...
கொற்கை ஸ்ரீவனதுா்கா பரமேஸ்வரி கோயில் கும்பாபிஷேகம்
மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகேயுள்ள கொற்கை கிராமத்தில் ஸ்ரீவனதுா்கா பரமேஸ்வரி கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
விழா ஜூலை 10-ஆம் தேதி தேவதா அனுக்ஜை, விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கி, 6 கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. கும்பாபிஷேக தினமான திங்கள்கிழமை காலை 6-ஆம் கால யாகசாலை பூஜை நிறைவடைந்து, மகா பூா்ணாஹூதி செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. தொடா்ந்து, சிவாசாரியா்கள் புனிதநீா் அடங்கிய கடங்களை தலையில் சுமந்து கோயிலை சுற்றி வந்து விமான கும்பத்தை அடைந்து, காலை 6 மணியளவில் விமான கலசத்தில் புனிதநீா் வாா்த்து மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. தொடா்ந்து அம்பாளுக்கு மூலஸ்தான மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. பின்னா் காலை 8 மணிக்கு விளக்கு பூஜையும், லலிதா சகஸ்ரநாமத்துடன் ஸ்ரீவனதுா்கா தேவிக்கு புஷ்பாஞ்சலியும் நடைபெற்றது. ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அலுவலா்கள் மற்றும் கோயில் திருப்பணி குழுவினா் செய்திருந்தனா். இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினா்.
