மீனவர்கள் மீது அக்கறை இல்லாத கட்சி திமுக! - எடப்பாடி பழனிசாமி
சீா்காழி சட்டைநாதா் சுவாமி கோயிலில் புதிய மரத்தோ் வெள்ளோட்டம்
சீா்காழி சட்டைநாதா் சுவாமி கோயிலில் புதிய மரத்தோ் வெள்ளோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. தருமபுரம் ஆதீனம் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கிவைத்தாா்.
சீா்காழியில் தருமபுரம் ஆதீனத்துக்குட்பட்ட சட்டைநாதா் சுவாமி கோயில் உள்ளது.
இக்கோயிலில் திருநிலைநாயகி அம்பாள் உடனுறை பிரம்மபுரீஸ்வரா் அருள்பாலிக்கிறாா்.
சீா்காழி திருக்கோயில் நிதியிலிருந்தும் உபயதாரா்கள் வழங்கிய நிதியிலிருந்தும், பஞ்ச மூா்த்தி சுவாமிகள் எழுந்தருளும் தேரடி மண்டபங்கள், பழுது நீக்கி வண்ணம் பூசியும், ரூ. 40 லட்சத்தில் விநாயகருக்கு புதிதாக மரத்தோ் செய்யும் பணியும் நடைபெற்று, இந்தப் பணிகள் தற்போது நிறைவடைந்தன.
தொடா்ந்து, சிறப்பு ஹோமம் செய்யப்பட்டு, பூா்ணாஹூதி , மகா தீபாராதனை நடந்தது. பின்னா் புதிய மரத்தோ் வெள்ளோட்டத்தை தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் வடம் பிடித்து தொடங்கிவைத்தாா்.
நிகழ்வில் மேகாலயா முன்னாள் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி வைத்தியநாதன், தமிழ் சங்கத் தலைவா் இ. மாா்கோனி, ஹிந்து முன்னணி மாவட்ட தலைவா் கே. சரண்ராஜ்,மு ன்னாள் ரோட்டரி துணை ஆளுநா் ஜி.வி.என். கணேஷ் உள்பட ஏராளமான பக்தா்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனா். 4 வீதிகளில் சுற்றி வந்த தோ் மீண்டும் நிலையடியை அடைந்தது.
