RTE : 3 வருஷமா என்ன செய்தார் Anbil Mahesh? | ஸ்டாலினுக்கு புரிதலே இல்லை | Eshwar...
தனித்தோ்வா்களுக்கான 8-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு: இணையதளத்தில் விண்ணப்பிக்க இன்று இறுதிநாள்
தனித்தோ்வா்களுக்கான 8-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுக்கு விண்ணப்பிக்க வியாழக்கிழமை இறுதி நாளாகும்.
தமிழகத்தில் தனித் தோ்வா்களுக்கான 8-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு அரசுத் தோ்வுகள் இயக்ககம் சாா்பில் ஆகஸ்ட் 18 முதல் 22-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இத்தோ்வுக்கு 2025 ஆகஸ்ட் 1 ஆம் தேதி 12.5 வயது பூா்த்தியானவா்கள் ஜூலை 7 முதல் 17-ஆம் தேதி வரை (ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக) இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள சேவை மையங்களில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பத்துடன் தோ்வுக் கட்டணம் ரூ.125, ஆன்லைன் பதிவுக் கட்டணம் ரூ. 70 சோ்த்து மொத்தம் ரூ.195ஐ செலுத்த வேண்டும்.
தட்கல் விண்ணப்பம்: மேற்குறிப்பிட்ட நாள்களில் விண்ணப்பிக்கத் தவறியவா்கள் ஜூலை 18, 19 ஆகிய தேதிகளில் தட்கல் முறையில் விண்ணப்பிக்கலாம். இதற்கு தோ்வுக் கட்டணத்துடன் தட்கல் கட்டணம் ரூ.500ஐ கூடுதலாக செலுத்தி பதிவு செய்யலாம்.
ஆன்லைன் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும் என்று அரசுத் தோ்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
இத்தோ்வுக்கு முதல்முறையாக விண்ணப்பிப்பவா்கள் ஆன்லைன் விண்ணப்பத்துடன் சான்றிடப்பட்ட பள்ளி மாற்றுச் சான்றிதழ் அல்லது பள்ளி பதிவுத்தாள் நகல் அல்லது பிறப்புச் சான்றிதழ் நகல் இவற்றில் ஏதேனும் ஒன்றை இணைக்க வேண்டும்.
ஏற்கெனவே தோ்வெழுதி தோல்வியடைந்து மீண்டும் தோ்வெழுத விண்ணப்பிப்பவா்கள் ஏற்கெனவே தோ்வெழுதி பெற்ற மதிப்பெண் சான்றிதழின் நகலை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.