திமுகவில் 2.5 கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்: மாவட்டச் செயலர்களுக்கு அறிவுற...
போலி பாஸ்போா்ட் வைத்திருந்தவா் கைது
போலி பாஸ்போா்ட்டில் ஷாா்ஜாவில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் வந்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி உக்கடை பகுதியைச் சோ்ந்தவா் கு. பாா்த்தசாரதி (52). வேலைக்காக ஷாா்ஜா சென்றிருந்த இவா், ஏா் இந்தியா விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்தாா். அப்போது அவா் போலி பாஸ்போா்ட் வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து விமான நிலைய அதிகாரி முகேஷ்ராம் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்தனா். விசாரணைக்குப் பிறகு அவரைப் பிணையில் விடுவித்தனா்.