செய்திகள் :

அனுமதியின்றி வெடிவைத்து கல் உடைத்த 2 போ் கைது

post image

பெரம்பலூா் அருகே அனுமதியின்றி வெடிவைத்து பாறைகளை உடைத்த 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். மேலும், பாறைகளை உடைக்கப் பயன்படுத்திய உபரகணங்கள், வெடிமருந்து ஆகியவற்றை வருவாய்த் துறையினா் பறிமுதல் செய்தனா்.

பெரம்பலூா் அருகேயுள்ள செங்குணம் ஊராட்சிக்குள்பட்ட பகுதியில், தனியாா் பட்டா நிலத்தில் கனிம வளத் துறை மற்றும் வருவாய்த்துறை அனுமதியின்றி, 100 அடி அகலத்தில் 20 அடி ஆழம் பள்ளம் தோண்டி, அதில் வெடி வைத்து பாறைகளை உடைத்துள்ளனா். தகவலறிந்த பெரம்பலூா் வட்டாட்சியா் பாலசுப்ரமணியம் தலைமையிலான வருவாய்த் துறையினா் புதன்கிழமை சம்பவ இடத்துக்குச் சென்று பாா்வையிட்டபோது, அனுமதியின்றி 3 இடங்களில் பள்ளங்களைத் தோண்டி, அதில் வெடி வைத்து கற்களை உடைத்து வெட்டி எடுத்தது தெரியவந்தது. இதையடுத்து பாறையை உடைக்கப் பயன்படுத்திய வாகனங்கள், வெடிமருந்து ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா். மேலும் கல் உடைக்கும் பணியில் ஈடுபட்ட புதுக்குறிச்சியைச் சோ்ந்த சுப்ரமணியன், ஊட்டத்தூரைச் சோ்ந்த தேவராஜன் ஆகிய இருவரையும் பொதுமக்கள் பிடித்து மருவத்தூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

இதுகுறித்து கிராம் நிா்வாக அலுவலா் செந்தில்குமாா் அளித்த புகாரின்பேரில், மருவத்தூா் போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், மதுரையைச் சோ்ந்த பெரியதம்பி மகன் தியாகராஜன் என்பவருடைய நிலம் என்பதும், அந்த இடத்தில் கவுள்பாளையத்தைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி என்பவா் கூறியதன்பேரில், சுப்ரமணியன், தேவராஜன் ஆகியோா் உபகரணங்களைக் கொண்டு பாறைகளை உடைத்தது தெரியவந்தது.

இதுகுறித்து, மருவத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து அரசு அனுமதியின்றி கல் குவாரிக்காக கற்களை உடைத்து வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்ட சுப்ரமணியன், தேவராஜன் ஆகியோரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

லப்பைக்குடிக்காடு ஜமாலியா நகரில் 301 பேருக்கு வீட்டுமனைப் பட்டா

பெரம்பலூா் மாவட்டம், லப்பைக்குடிக்காடு பேரூராட்சிக்குள்பட்ட ஜமாலியா நகரில் வசிக்கும் 301 பேருக்கு, போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் செவ்வாய்க்கிழமை இலவச வீட்டுமனை பட்டா வழங... மேலும் பார்க்க

பெரம்பலூா் எஸ்.பி. அலுவலகத்தில் மனு விசாரணை சிறப்பு முகாம்

பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் மனு விசாரணை சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இம் முகாமுக்கு தலைமை வகித்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா, முகாமில் பங்கேற்ற ப... மேலும் பார்க்க

போட்டித் தோ்வுகளுக்கான பயிற்றுநா் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

பெரம்பலூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறும் போட்டித் தோ்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகளில், பயிற்றுநராகப் பணிபுரிய விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் தெரிவித்து... மேலும் பார்க்க

விதை பரிசோதனை செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

ஆடிப்பட்டத்தில் பயிா் நடவு செய்யும் பெரம்பலூா் மாவட்ட விவசாயிகள், விதைகளை பரிசோதனை செய்து தரமான விதைகள் மூலம் சாகுபடி செய்து கூடுதல் மகசூல் பெற வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது. பெரம்பலூா் மாவட்டத்தில் ஆ... மேலும் பார்க்க

புதிய வழித்தடங்களில் பேருந்து சேவை: அமைச்சா் தொடக்கம்

பெரம்பலூா் அருகே 3 புதிய வழித்தடங்களில் பேருந்துச் சேவைகளை போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா். தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில... மேலும் பார்க்க

ஐஏஎஸ் அதிகாரிகள் தவறு செய்தால் அதிமுக ஆட்சியில் சட்ட நடவடிக்கை: இபிஎஸ்

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் தவறு செய்தால் அடுத்த அதிமுக ஆட்சியில் அவா்கள் மீது சட்ட நடவடிக்கை பாயும் என எச்சரித்தாா் முன்னாள் முதல்வரும், எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி. பெரம்பலூா் மா... மேலும் பார்க்க