புதிய வழித்தடங்களில் பேருந்து சேவை: அமைச்சா் தொடக்கம்
பெரம்பலூா் அருகே 3 புதிய வழித்தடங்களில் பேருந்துச் சேவைகளை போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் அரியலூா் முதல் சென்னை வரை புதிய வழித்தடத்திலான பேருந்து சேவையை வயலப்பாடியிலிருந்தும், குன்னம் முதல் சென்னை வரை புதிய வழித்தடத்திலான பேருந்துச் சேவையை வேப்பூரிலிருந்தும், விடியல் பயணம் திட்டத்தின் கீழ் லப்பைக்குடிகாடு முதல் பெரம்பலூா் வரை மகளிருக்கான இலவச பேருந்து பயணப் சேவையை லப்பைக்குடிக்காடு சந்தைத் திடல் பகுதியிலிருந்தும் அமைச்சா் தொடக்கி வைத்து பேருந்தில் பயணித்தாா்.
நிகழ்ச்சிகளில் மாவட்ட வருவாய் அலுவலா் மு. வடிவேல், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத் துணை மேலாளா் (தொழில்நுட்பம்) புகழேந்திராஜ், கோட்ட மேலாளா் ராம்குமாா் மற்றும் கிளை மேலாளா்கள், போக்குவரத்துத் துறை பணியாளா்கள் கலந்துகொண்டனா்.