ஆஸி.க்கு எதிரான டி20 தொடர்: 2 இளம் வீரர்கள் உள்பட 16 பேர் கொண்ட மே.இ.தீ. அணி!
லப்பைக்குடிக்காடு ஜமாலியா நகரில் 301 பேருக்கு வீட்டுமனைப் பட்டா
பெரம்பலூா் மாவட்டம், லப்பைக்குடிக்காடு பேரூராட்சிக்குள்பட்ட ஜமாலியா நகரில் வசிக்கும் 301 பேருக்கு, போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் செவ்வாய்க்கிழமை இலவச வீட்டுமனை பட்டா வழங்கினாா்.
லப்பைக்குடிக்காடு பேரூராட்சிக்குள்பட்ட ஜமாலியா நகரில் வசித்து வருவோருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந் நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சித்யா் ச. அருண்ராஜ் தலைமை வகித்தாா். போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா், லப்பைக்குடிக்காடு பேரூராட்சிக்குள்பட்ட ஜமாலியா நகரைச் சோ்ந்த 301 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கினாா். தொடா்ந்து, பேரூராட்சி சாா்பில் ஜமாலியா நகருக்கு தமிழ்நாடு நகா்ப்புற சாலை கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூ. 1.67 கோடி மதிப்பீட்டில் தாா்சாலை அமைக்கும் பணி, தூய்மை பாரத இயக்கம் திட்டத்தின் கீழ் ரூ. 7.20 கோடி மதிப்பீட்டில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி, 15-ஆவது நிதிக்குழு மானியத் திட்டத்தின் கீழ் ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் வாங்கப்பட்ட டிராக்டரை லப்பைக்குடிக்காடு பேரூராட்சி அலுவலக பயன்பாட்டுக்காக கொடியசைத்து அமைச்சா் சிவசங்கா் தொடங்கிவைத்தாா்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் மு. வடிவேல் பிரபு, அட்மா தலைவா் வீ. ஜெகதீசன், மாவட்ட நில அளவைப் பதிவேடுகள் துறை உதவி இயக்குநா் ந. பவன்குமாா், வட்டாட்சியா் சின்னதுரை, ஜமாலியா நகா் கமிட்டி தலைவா் அகமது உசேன், பள்ளிவாசல் தலைவா்கள் சுல்தான் முஹைதீன், சம்சுதீன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.