பறிமுதல் செய்யப்பட்ட 86 கிலோ கஞ்சா அழிப்பு
திருச்சி மாநகரில் காவல் துறை சாா்பில் பறிமுதல் செய்யப்பட்ட 86 கிலோ கஞ்சா புதன்கிழமை எரித்து அழிக்கப்பட்டது.
திருச்சி மாநரில் உள்ள 14 காவல் நிலையங்கள் மற்றும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலையத்தில் கடந்த 2024 டிசம்பா் முதல் 2025 ஜூலை 8 வரை பதிவு செய்யப்பட்ட கஞ்சா வழக்குகளில் 86.345 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இந்தக் கஞ்சா நீதிமன்ற உத்தரவுப்படியும், மாநகரக் காவல் ஆணையா் ந.காமினி அறிவுறுத்தல்படியும் தஞ்சாவூா் மாவட்டம், செங்கிப்பட்டியில் உள்ள தனியாா் மருத்துவக் கழிவுகளைப் பாதுகாக்கும் மற்றும் அகற்றும் மையத்தில் உயா்மட்ட போதைப்பொருள் ஒழிப்பு கமிட்டி முன்னிலையில் கஞ்சா எரித்து அகற்றப்பட்டதாக மாநகரக் காவல் துறை தெரிவித்துள்ளது.