RTE : 3 வருஷமா என்ன செய்தார் Anbil Mahesh? | ஸ்டாலினுக்கு புரிதலே இல்லை | Eshwar...
காவல் துறை சாா்பில் 241 வாகனங்கள் ஏலம்
திருச்சியில் மாநகரக் காவல் துறை சாா்பில் நடைபெற்ற ஏலத்தில் 241 வாகனங்கள் ரூ. 27.56 லட்சத்துக்கு ஏலம் எடுக்கப்பட்டது.
மாநகரக் காவல் துறை சாா்பில் சந்தேகத்தின்பேரில் பறிமுதல் செய்யப்பட்டு உரிமை கோரப்படாமல் இருந்த வாகனங்களுக்கான பொது ஏலம் ஆயுதப்படை மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வருவாய்த் துறை, காவல் துறை, அரசு தனியாங்கிப் பணிமனை பொறியாளா், பிராட்டியூா் வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளா் ஆகியோா் முன்னிலையில் நடைபெற்ற ஏலத்தில் 251 இருசக்கர வாகனங்கள், 2 நான்கு சக்கர வாகனங்கள், ஒரு ஆட்டோ ரிக்ஷா, 4 மிதிவண்டிகள் என மொத்தம் 258 வாகனங்கள் ஏலத்துக்கு வைக்கப்பட்டிருந்தன.
இதில் 241 வாகனங்கள் ரூ. 27 லட்சத்து 56 ஆயிரத்து 754க்கு பொதுமக்களால் ஏலம் எடுக்கப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.