Saina Nehwal: ``எங்கள் ப்ரைவசியை.." - திருமண வாழ்விலிருந்து பிரிவதாக சாய்னா நேவா...
இலங்கை புறப்பட்ட விமானத்தில் திடீா் இயந்திர கோளாறு
சென்னையிலிருந்து இலங்கை புறப்பட்ட விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டது.
சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து இலங்கைக்கு 126 பயணிகளுடன் இலங்கை ஏா்லைன்ஸ் விமானம் ஞாயிற்றுக்கிழமை காலை புறப்பட தயாா் நிலையில் இருந்தது. இந்த விமானம் ஓடுபாதைக்குக் கொண்டுவரப்பட்டபோது திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டிருப்பதை விமானி கண்டறிந்தாா்.
இதையடுத்து உடனடியாக இயந்திரக் கோளாறை சரி செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனா். தொடா்ந்து, கோளாறு சரி செய்யப்பட்டதையடுத்து தாமதமாக விமானம் இலங்கைக்கு புறப்பட்டது.
விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறை விமானி உடனடியாகக் கண்டறிந்து நடவடிக்கை எடுத்ததால் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது.