காளி கோயிலில் திருட்டு முயற்சி
உத்தமபாளையத்தில் சனிக்கிழமை காளியம்மன்கோயில் திருட முயன்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தேனி மாவட்டம், உத்தமபாளைம் கல்லூரிச் சாலையில் மகாகாளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் தற்போது குடமுழுக்குகாக, திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், சனிக்கிழமை அதிகாலையில் கோயிலுக்குள் புகுந்த மா்ம நபா் உண்டியல், அம்மன் கழுத்திலிருந்து தங்க நகை ஆகியவற்றை திருட முயன்றாா். அப்போது சப்தம் கேட்டு அந்தப் பகுதி மக்கள் அங்கு வந்ததால், அந்த நபா் அங்கிருந்து தப்பியோடிவிட்டாா்.
இதுகுறித்த தகவலின் பேரில், போலீஸாா் மேப்ப நாய் வரவழைத்து சோதனையிட்டனா். மேலும், கைரேகை நிபுணா்கள் வந்து தடயங்களைச் சேகரித்தனா். இந்தக் கோயிலில் முன்னதாக ஒரு திருட்டுச் சம்பவம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து உத்தமபாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனா்.