மேட்டூர் அணை நிலவரம்!
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 22,500 கன அடியாக குறைந்துள்ளது.
கடந்த மூன்று நாள்களாக மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 30,250 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
இன்று(ஜூலை 13) காலை அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 22,500 கன அடியாக சற்று குறைந்துள்ளது.
நீர் வரத்து குறைந்துள்ளதால் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவும் வினாடிக்கு 22,500 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
நீர் மின் நிலையங்கள் வழியாக விநாடிக்கு 22,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 250 கன அடியிலிருந்து வினாடிக்கு 500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும் நீர் இருப்பு 93.47 டிஎம்சியாகவும் உள்ளது.
The water inflow to Mettur Dam has decreased to 22,500 cubic feet.
இதையும் படிக்க: தமிழக மீனவர்கள் 7 பேர் கைது! இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம்!