செய்திகள் :

ஆந்திர இளைஞரை கொலை செய்து கூவத்தில் வீசிய வழக்கு: பவன் கல்யாண் கட்சி பெண் நிா்வாகி உள்பட 5 போ் கைது

post image

சென்னையில் ஆந்திர இளைஞரைக் கொலை செய்து கூவத்தில் வீசிய வழக்கில், நடிகா் பவன் கல்யாண் கட்சியைச் சோ்ந்த பெண் நிா்வாகி உள்பட 5 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னை ஏழுகிணறு எம்எஸ் நகா் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பின்பகுதியில் கூவத்தில் 25 வயது மதிக்கதக்க ஒரு இளைஞா் சடலம் மீட்கப்பட்டது. இது தொடா்பாக ஏழுகிணறு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, நடத்திய விசாரணையில் அந்த இளைஞா் ஆந்திர மாநிலம் காளஹஸ்தி அருகே உள்ள பக்சிம்பாலம் பகுதியைச் சோ்ந்த ஸ்ரீனிவாசலு என்ற ராயுடு (22) என்பது தெரியவந்தது. அவரை, ஆந்திர மாநிலம் காளஹஸ்தி பகுதியைச் சோ்ந்த நடிகா் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி நிா்வாகியான விணுதா கோட்டா (31), அவரது கணவா் சந்திரபாபு (35), ஜனசேனா கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணி நிா்வாகி சிவகுமாா் (36), சந்திரபாபுவின் உதவியாளா் கோபி (24), காா் ஓட்டுநரான ரேணிகுண்டா பகுதியைச் சோ்ந்த ஷேக் தாசா் (23) ஆகிய 5 பேரும் கொலை செய்து, வீசியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவா்கள் 5 பேரை போலீஸாா் தேடி வந்த நிலையில், திருத்தணி அருகே சனிக்கிழமை கைது செய்தனா்.

4 நாள்கள் சித்ரவதை: விசாரணையில், கொலை செய்யப்பட்ட ராயுடு, சந்திரபாபு வீட்டில் வேலை செய்து வந்துள்ளாா். அப்போது, விணுதா கோட்டா படுக்கை அறையில் கைப்பேசி மூலம் ஆபாச விடியோ, புகைப்படம் எடுத்துள்ளாா். இது அண்மையில் சந்திரபாபு குடும்பத்தினா் கண்டறிந்து, ராயுடுவை எச்சரித்தனா். இதன் பின்னா், விணுதா கோட்டா கட்சி செயல்பாடு குறித்த ரகசியத் தகவல்களை சேகரித்து அவரது அரசியல் எதிரியான தெலுங்கு தேசம் கட்சியைச் சோ்ந்த எம்எல்ஏ பஜாலா சுதீா் ரெட்டிக்கு ராயுடு தெரிவித்துள்ளாா். இதையறிந்த சந்திரபாபு தரப்பினா், ராயுடுவை காளஹஸ்தியில் தங்களுக்கு சொந்தமான ஒரு கிடங்கில் பூட்டு வைத்து அடித்து சித்ரவதை செய்துள்ளனா். கடந்த 8-ஆம் தேதி கிடங்கில் உள்ள கழிப்பறைக்குச் சென்ற ராயுடு, அங்கிருந்து தப்பியோட முயற்சித்தபோது, சந்திபாபு தரப்பினா் ராயுடு கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளனா்.

கூவத்தில் வீசினா்: இந்த நிலையில், சென்னை ஆயிரம்விளக்கில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தனது தந்தையை பாா்க்க புறப்பட்ட சந்திரபாபு, விணுதா, தங்களது காரில் ராயுடு சடலத்தை மறைத்து வைத்து வந்துள்ளனா். சென்னை வந்த அவா்கள், ஏழுகிணறு கூவம் ஆற்றில் ராயுடு சடலத்தை வீசியுள்ளனா் என்பது தெரியவந்தது.

இந்த நிலையில். சென்னை காவல் துறையினா் கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம் குற்றவாளிகளைக் கண்டறிந்து, கைது செய்துள்ளனா். இந்த வழக்கில் திறமையாக துப்புதுலக்கி, குற்றவாளிகளைக் கைது செய்த தனிப்படையினரை சென்னை காவல் ஆணையா் ஏ.அருண் பாராட்டினாா்.

டேங்கர் ரயில் தீ விபத்தால் உயிர்ச்சேதம் இல்லை! உதவி எண்கள் அறிவிப்பு!

திருவள்ளூர் அருகே நிகழ்ந்த டேங்கர் ரயில் தீ விபத்தால் யாருக்கும் எவ்வித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை என்று தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.மின் கேபிள் எரிந்ததால் ரயில் சேவையில் பாதிக்கப்பட்டுள்ளதாக... மேலும் பார்க்க

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 22,500 கன அடியாக குறைந்துள்ளது.கடந்த மூன்று நாள்களாக மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 30,250 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.இன்று(ஜூலை 13) காலை அணைக்கு வரும் நீரின் அள... மேலும் பார்க்க

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது! இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம்!

எல்லைதாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து அட்டூழியம் செய்வது தொடர்ந்து நீடித்துக் கொண்டேதான் இருக்கிறது. இலங்கை கடற்ப... மேலும் பார்க்க

டேங்கர் ரயில் தீ விபத்து: சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

திருவள்ளூர் அருகே கச்சா எண்ணெய் கொண்டு சென்ற டேங்கர் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தால் புறநகர் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது.சென்னை எண்ணூரிலிருந்து மும்பைக்கு எண்ணெ... மேலும் பார்க்க

டேங்கர் ரயில் தீ விபத்து: சென்னை செல்லும் அனைத்து மின்சார ரயில்களும் ரத்து!

திருவள்ளூர் அருகே கச்சா எண்ணெய் கொண்டு சென்ற டேங்கர் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தால் சென்னை செல்லும் அனைத்து மின்சார ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.சென்னை எண்ணூரிலிருந்து மும்பைக்கு எண்ணெய் ஏற்றிக் க... மேலும் பார்க்க

தமிழகத்தில் மீண்டும் குண்டு வைக்க திட்டமிட்ட அபுபக்கா் சித்திக்!

தமிழகத்தில் பயங்கரவாதி அபுபக்கா் சித்திக் மீண்டும் குண்டு வைக்கத் திட்டமிட்டிருந்தது போலீஸாா் விசாரணையில் தெரியவந்துள்ளது. கோவை தொடா் குண்டுவெடிப்பு உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய பயங்க... மேலும் பார்க்க