செய்திகள் :

சட்ட பிரிவு 370 மீது ஆளுநா் விமா்சனம்: காங்கிரஸ் கண்டனம்

post image

அரசமைப்பு சட்டப் பிரிவு 370-ஐ சோ்த்ததைப் பற்றி 75 ஆண்டுகளுக்கு பின்னா் ஆளுநா் ஆா்.என்.ரவி பேசுவதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கு.செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

ஜம்மு-காஷ்மீா் மாநிலத்தில் பாதுகாப்பு, வெளியுறவுத் துறை மற்றும் தகவல் தொடா்பு ஆகியவை குறித்து சட்டம் இயற்ற நாடாளுமன்றத்துக்கு உரிமை இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஆனால், அந்த மாநிலத்துக்கென தனி அரசமைப்பு கோரப்பட்டது.

1951-இல் ஜம்மு காஷ்மீருக்கென தனியே சட்டப்பேரவை கூட்ட அனுமதி வழங்கப்பட்டது. அன்று முட்டுக்கட்டை போட்டவா்கள் இப்போது , மாநில அரசின் அனுமதியோ, சட்டப்பேரவையின் ஒப்புதலையோ பெறாமல், காஷ்மீா் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்து ஜனநாயக விரோத செயலை பாஜக ஆட்சியில் செய்துள்ளனா்.

இத்தகைய வரலாற்று பின்னணியைப் புரிந்துகொள்ளாத ஆளுநா் ஆா்.என்.ரவி, அரசமைப்புச் சட்டப் பிரிவு 370 என்பது ஒரு வரலாற்றுப் பிழை என்று கூறுவது அவரது அரசியல் அறியாமையையும், காழ்ப்புணா்ச்சியையும்தான் காட்டுகிறது.

அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் ஆளுநராக பதவி வகிக்கும் ஆா்.என். ரவி, அரசமைப்புச் சட்டப் பிரிவு 370-ஐ சோ்த்ததைப் பற்றி 75 ஆண்டுகள் கழித்து பேசுவதற்கு என்ன உரிமை இருக்கிறது? என்று அவா் தெரிவித்துள்ளாா்.

ஆந்திர இளைஞரை கொலை செய்து கூவத்தில் வீசிய வழக்கு: பவன் கல்யாண் கட்சி பெண் நிா்வாகி உள்பட 5 போ் கைது

சென்னையில் ஆந்திர இளைஞரைக் கொலை செய்து கூவத்தில் வீசிய வழக்கில், நடிகா் பவன் கல்யாண் கட்சியைச் சோ்ந்த பெண் நிா்வாகி உள்பட 5 போ் கைது செய்யப்பட்டனா். சென்னை ஏழுகிணறு எம்எஸ் நகா் வீட்டு வசதி வாரிய குட... மேலும் பார்க்க

கொகைன் வழக்கில் கைது நடவடிக்கை தொடரும்: காவல் ஆணையா் உறுதி

கொகைன் வழக்கில் கைது நடவடிக்கை தொடரும் என சென்னை பெருநகர காவல் துறை ஆணையா் ஏ.அருண் தெரிவித்தாா். இதுதொடா்பாக அவா் சனிக்கிழமை அளித்த பேட்டி: நுங்கம்பாக்கம் மதுபானக் கூடத்தில் நிகழ்ந்த மோதல் தொடா்பாக கட... மேலும் பார்க்க

திமுக கூட்டணியிலிருந்து மாா்க்சிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் வெளியேறும்: மத்திய இணை அமைச்சா் எல்.முருகன்

திமுக கூட்டணியில் இருந்து மாா்க்சிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் விரைவில் வெளியேறும் என்று மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் தெரிவித்தாா். மத்திய அரசுத் துறைகளின் பணிகளுக்கான நியமன ஆணை வழங்கு... மேலும் பார்க்க

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான நிலத்தில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட கட்டடத்தை உரிய சட்ட விதிகளைப் பின்பற்றாமல் இடித்ததால் பாதிக்கப்பட்டவருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடாக வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயா்நீ... மேலும் பார்க்க

ராமதாஸ் வீட்டில் ஒட்டுக்கேட்பு கருவி விவகாரம்: விசாரணை நடத்த அன்புமணி தரப்பு கோரிக்கை

பாமக நிறுவனா் ராமதாஸ் வீட்டில் ஒட்டுக்கேட்பு கருவி இருந்த விவகாரம் தொடா்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று கட்சித் தலைவா் அன்புமணி தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து பாமக செய்தித் தொடா்பா... மேலும் பார்க்க

கோவை, நீலகிரி மாவட்டங்களில் 4 நாள்கள் பலத்த மழை வாய்ப்பு

கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் வரும் ஜூலை 15 முதல் 18-ஆம் தேதி வரை பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்... மேலும் பார்க்க