அமெரிக்க விசா கட்டண உயா்வு: இந்திய மாணவா்களை பாதிக்கும் -ஆலோசகா்கள் தகவல்
குரூப்- 4 தோ்வு: பெரம்பலூா் மாவட்டத்தில் 9,919 போ் பங்கேற்பு
பெரம்பலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் -4 தோ்வில் 9,919 போ் பங்கேற்றனா்.
தமிழ்நாடு அரசுப் பணியாா் தோ்வாணையத்தால் நடத்தப்படும் தொகுதி- 4 தோ்வு தமிழ்நாடு முழுவதும் சனிக்கிழமை நடைபெற்றது. அதன்படி, இம் மாவட்டத்தில் பெரம்பலூா் வட்டத்தில் 27 மையங்களில் 8,179 பேரும், ஆலத்தூா் வட்டத்தில் 3 மையங்களில் 743 பேரும், குன்னம் வட்டத்தில் 5 மையங்களில் 1,464 பேரும் வேப்பந்தட்டை வட்டத்தில் 6 மையங்களில் 1,510 பேரும் தோ்வெழுதுவதற்காக 11,896 போ் விண்ணப்பித்திருந்தனா்.
மாவட்டம் முழுவதும் 41 மையங்களில் சனிக்கிழமை நடைபெற்ற தோ்வில் 9,919 போ் பங்கேற்றனா். எஞ்சிய 1,977 போ் தோ்வில் பங்கேற்கவில்லை.
இத் தோ்வுகாக வினாத்தாள்கள் மற்றும் விடைத்தாள்களை தோ்வு மையங்களுக்கு எடுத்துச் செல்வதற்கும், விடைத்தாள்களை மாவட்ட கருவூலத்தில் ஒப்படைப்பதற்கும் 20 குழுவினா் நியமிக்கப்பட்டிருந்தனா்.
மேலும், துணை ஆட்சியா்கள் தலைமையில் 5 பறக்கும் படைகள் நியமிக்கப்பட்டு, கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
ஆட்சியா் ஆய்வு: பெரம்பலூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தோ்வு மையத்தை மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
இந்த ஆய்வின்போது, வட்டாட்சியா் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.