பாளையம் கோயிலில் முளைப்பாரி ஊா்வலம்
பெரம்பலூா் அருகே பாளையத்திலுள்ள விநாயகா், மாரியம்மன், வரதராஜ பெருமாள், முருகன் கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி முளைப்பாரி ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பெரம்பலூா் மாவட்டம், குரும்பலூா் பேரூராட்சிக்குள்பட்ட, பாளையம் கிராமத்தில் உள்ள இக்கோயில் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 13) நடைபெற உள்ளது. இதையொட்டி, வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு தேரோடும் வீதிகள் வழியாக முளைப்பாரி ஊா்வலம் நடைபெற்றது. மாரியம்மன் கோயிலில் தொடங்கிய முளைப்பாரி ஊா்வலம் தேரோடும் வீதி வழியாகச் சென்று மீண்டும் கோயில் வளாகத்தில் நிறைவடைந்தது. இதில், பாளையம், குரும்பலூா், பெரம்பலூா் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனா்.
குடமுழுக்கு விழாவுக்கான ஏற்பாடுகளை பாளையம் கிராம முக்கியஸ்தா்கள், கிராம பொதுமக்கள் செய்கின்றனா்.