விசாரணையில் தொய்வு: ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை கோவை ஐஜி அலுவலகத்தில் மனு
விபத்தில் காயமடைந்த விவசாயி உயிரிழப்பு
பெரம்பலூா் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த விவசாயி வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
பெரம்பலூா் அருகேயுள்ள லாடபுரம் பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்தவா் அ. மாணிக்கம் (64). விவசாயி. இவா், கடந்த 8 ஆம் தேதி இரவு பெரம்பலூரிலிருந்து லாடபுரத்துக்கு பைக்கில் சென்றபோது பெரம்பலூா்- துறையூா் சாலையிலுள்ள ஈச்சம்பட்டி செங்கல் சூளை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலத்த காயமடைந்தாா். இதையடுத்து, பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையிலும், திருச்சி தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா். பெரம்பலூா் ஊரகப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.