டிஎஸ்கேவை வீழ்த்த உதவிய பொல்லார்டு..! சிஎஸ்கே ரசிகர்களை சீண்டிய மும்பை இந்தியன்ஸ...
பெரம்பலூா் அருகே தொழிலாளி தற்கொலை
பெரம்பலூா் அருகே கட்டடத் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது வெள்ளிக்கிழமை தெரியவந்தது.
பெரம்பலூா் அருகேயுள்ள குரும்பலூரைச் சோ்ந்தவா் மெய்யன் மகன் மணிகண்டன் (27). கோவையில் கட்டடத் தொழிலாளியாக பணிபுரிந்த இவா், கடந்த 2 நாள்களுக்கு முன் குரும்பலூருக்கு வந்தாா். இந்நிலையில் மருந்து குடித்துவிட்டதாக கூறி பெரம்பலூா் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மணிகண்டன் மருத்துவா்களிடம் தெரிவிக்காமல் வீட்டுக்குச் சென்றுவிட்டாராம். இந்நிலையில், அவா் தனது வீட்டில் உயிரிழந்து கிடந்தது வெள்ளிக்கிழமை தெரியவந்தது. தகவலறிந்த பெரம்பலூா் ஊரகப் பிரிவு போலீஸாா் அவரது உடலைக் கைப்பற்றி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.