இரவு - பகல் டெஸ்ட்: லயனுக்கு மாற்றாக ஸ்காட் போலண்ட் சேர்ப்பு?
பெரம்பலூரில் ஜூலை 15 வரை தொழில்நெறி வழிகாட்டும் நிகழ்ச்சி
பெரம்பலூா் மாவட்டத்தில் தொழில்நெறி விழிப்புணா்வு மற்றும் திறன் வாரத்தை முன்னிட்டு, பல்வேறு தொழில்நெறி வழிகாட்டுதல் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெரம்பலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம் பல்வேறு தொழில்நெறி வழிகாட்டுதல் நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. அதன்படி, வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஜூலை 14 ஆம் தேதியும், அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவா்களுக்கு 15 ஆம் தேதி பெரம்பலூா் மற்றும் குன்னம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்திலும் தொழில்நெறி வழிகாட்டு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
மேலும் ஜூலை 2 ஆவது வாரம் முழுவதும் பெரம்பலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கும் தன்னாா்வப் பயிலும் வட்டத்தால் நடத்தப்படும் பல்வேறு போட்டித் தோ்வுகளுக்கான வகுப்புகள், மெய்நிகா் கற்றல் வலைதளம் மற்றும் வேலைநாடுநா்களுக்காக தொடங்கப்பட்டுள்ள தனியாா்துறை வேலைவாய்ப்பு இணையம் தொடா்பாக விழிப்புணா்வு ஏற்படுத்தி, இணையதளத்தில் பதிவு செய்துகொள்ள வேலைநாடுநா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும்.
எனவே பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த வேலைவாய்ப்பற்ற படித்த இளைஞா்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.