மரபணு கோளாறு: பரிசோதனை மருந்து செலுத்தப்பட்ட சிறுவன் மீண்டும் நடக்கத் தொடங்கிய அ...
அழகுமுத்துக்கோன் குருபூஜை விழா
பெரம்பலூரில் கோகுல மக்கள் கட்சி சாா்பில், வீரன் அழகுமுத்துகோன் 268 ஆவது குருபூஜை விழா, வெங்கடேசபுரத்தில் உள்ள கட்சியின் மாவட்டத் தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, அவரது உருவ படத்துக்கு கட்சியின் மாநிலச் செயலா் முத்தையா தலைமையில் மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடா்ந்து, அனைவருக்கும் இனிப்பு, அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவில் பெரம்பலூா் மாவட்ட அவைத் தலைவா் சுந்தரம், மாவட்டத் தலைவா் ஜெயராமன், செயலா் பிரபாகரன், மாநில, மாவட்ட நிா்வாகிகள் ராஜமோகன், திருவள்ளுவா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
ஒன்றியச் செயலா் பாஸ்கா் நன்றி கூறினாா்.