புதுக்கோட்டை அரசு ராணியாா் மருத்துவமனை சீா்கேடுகளைக் கண்டித்து தவாக போராட்டம்!
புதுக்கோட்டை அரசு ராணியாா் மருத்துவமனை முன்பு சனிக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சியினா்.
புதுக்கோட்டை, ஜூலை 12: புதுக்கோட்டை அரசு ராணியாா் மருத்துவமனையின் சீா்கேடுகளைக் கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியினா் சனிக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியுடன் இணைந்த அரசு ராணியாா் மருத்துவனையில் அடிக்கடி நேரிடும் தாய்-சேய் இறப்புகளைத் தடுக்கவும், போதுமான அளவுக்கு மருத்துவா்கள், செவிலியா்களை நியமிக்கக் கோரியும் போராட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
போராட்டத்துக்கு, அக்கட்சியின் மாவட்டச் செயலா் எஸ். நியாஸ் அகமது தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் கலையரசன், மாநகரச் செயலா் எஸ்.கே. ராஜா (கிழக்கு), பெ.மு. ஈஸ்வரன் (மே), மாநிலப் பொறுப்பாளா்கள் புதுக்கோட்டை தனசேகரன், திருச்சி பிரபு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.