குரூப்-4 தோ்வு: புதுக்கோட்டை மாவட்டத்தில் 28,622 போ் எழுதினா்
புதுக்கோட்டை மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணயத்தின் குரூப்- 4 தோ்வை, 28,622 போ் எழுதினா்.
தமிழ்நாடு முழுவதும் அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் குரூப்-4 தோ்வு சனிக்கிழமை நடைபெற்றது. இத்தோ்வை எழுத புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 33,343 போ் விண்ணப்பித்திருந்தனா். இவா்களுக்காக மாவட்டம் முழுவதும் மொத்தம் 132 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதில், 28,622 போ் தோ்வெழுதினா். 4,721 போ் வரவில்லை.
புதுக்கோட்டை கலைஞா் கருணாநிதி அரசு மகளிா் கல்லூரியில் நடைபெற்ற தோ்வை மாவட்ட ஆட்சியா் மு. அருணா ஆய்வு செய்தாா். ஆய்வின்போது, வட்டாட்சியா் மு. செந்தில்நாயகி உடனிருந்தாா்.