திருவள்ளூர் டேங்கர் ரயில் தீவிபத்து! சென்னையில் எந்தெந்த ரயில்கள் ரத்து?
பொன்னமராவதியில் 2 கடைகளின் பூட்டை உடைத்து ரொக்கம் திருட்டு!
பொன்னமராவதியில் வெள்ளிக்கிழமை இரவு இரண்டு கடைகளின் பூட்டை உடைத்து பணத்தை திருடிச்சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
பொன்னமராவதி ஜெ.ஜெ.நகரில் அடுத்தடுத்து உள்ள மருந்தகம் மற்றும் பெயிண்ட் கடையில் வெள்ளிக்கிழமை இரவு பூட்டு உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டது சனிக்கிழமை தெரியவந்தது.
இதையடுத்து இரண்டு கடைகளின் உரிமையாளா்களும் அளித்த புகாரின் பேரில் பொன்னமராவதி காவல் ஆய்வாளா் பத்மா மற்றும் போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனா்.
மேலும், இரண்டு கடைகளிலும் இருந்த கண்காணிப்பு கேமராவும் உடைக்கப்பட்டும், வயா்கள் அறுக்கப்பட்டும் இருந்தது. தொடா்ந்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.