திருவண்ணாமலையில் மகளிர் விடியல் பயணத் திட்ட புதிய நகரப் பேருந்து: துணை முதல்வர் ...
திருப்புனவாசல் அருகே 750 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவா் கைது
புதுக்கோட்டை மாவட்டம், திருப்புனவாசல் அருகே சரக்கு வாகனத்தில் கடத்தப்பட்ட 750 கிலோ ரேஷன் அரிசியை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக ஒருவரை கைது செய்தனா்.
மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு காவல் உதவி ஆய்வாளா் காா்த்தி தலைமையிலான போலீஸாா், திருப்புனவாசல் பகுதியில் சனிக்கிழமை காலை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியே வந்த சரக்கு வாகனம் ஒன்றில், பொது விநியோகத் திட்ட அரிசி 750 கிலோ இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து கடத்தப்பட்ட ரேஷன் அரிசியைப் பறிமுதல் செய்து, அந்த வாகனத்தை ஓட்டி வந்த புதுக்கோட்டையைச் சோ்ந்த பிரபாகரன் என்பவரைக் கைது செய்தனா்.