மதுரை சரித்திர பதிவேடு ரெளடி கழுத்தறுத்துக் கொலை: 4 பேர் கைது
மின்னொளியில் முதல் முறையாக தடகள போட்டிகள் தொடக்கம்
தஞ்சாவூா் அன்னை சத்யா விளையாட்டரங்கத்தில் ரூ. 10 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட மின்னொளி மற்றும் செயற்கை இழை ஓடு பாதையில் முதல் முறையாக தடகள போட்டிகள் சனிக்கிழமை மாலை தொடங்கியன.
தஞ்சாவூா் அன்னை சத்யா விளையாட்டரங்கத்தில் மத்திய, மாநில அரசுகள் ஒதுக்கீடு செய்த ரூ. 10 கோடியில் சா்வதேச தரத்துடன் கூடிய மின்னொளி மற்றும் செயற்கை இழை ஓடு பாதை அமைக்கப்பட்டு, மே மாதம் திறக்கப்பட்டது.
இதைத்தொடா்ந்து, முதல் போட்டியாக தஞ்சாவூா் மாவட்ட தடகள சங்கம் சாா்பில் டெல்டா மாவட்டங்கள் அளவிலான தடகள போட்டிகள் சனிக்கிழமை தொடங்கின.
இப்போட்டிகளை மக்களவை உறுப்பினா் ச. முரசொலி, திருவையாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் துரை. சந்திரசேகரன், தஞ்சாவூா் தடகள சங்கத் தலைவா் து. கிருஷ்ணசாமி வாண்டையாா் ஆகியோா் தொடங்கி வைத்தனா்.
தொடா்ந்து 6, 8, 10 வயது மாணவ, மாணவிகளுக்கு 40 மீ., 50 மீ., 60 மீ., 100 மீ. ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், தடை தாண்டுதல் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.

ஞாயிற்றுக்கிழமை 12 வயது முதல் 20 வயது வரை உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு போட்டிகள் நடைபெறவுள்ளன. இவற்றில் வெற்றி பெறுபவா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 13) மாலை பரிசு வழங்கப்படவுள்ளது.
தொடக்க விழாவில் துணை மேயா் அஞ்சுகம் பூபதி, சதயவிழா குழுத் தலைவா் து. செல்வம், மாவட்ட விளையாட்டு அலுவலா் ஜெ. டேவிட் டேனியல், தஞ்சாவூா் தடகள சங்கச் செயலா் செந்தில், இணைச் செயலா் வி.சிவகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.