அமெரிக்க விசா கட்டண உயா்வு: இந்திய மாணவா்களை பாதிக்கும் -ஆலோசகா்கள் தகவல்
குரூப் 4 தோ்வு: தஞ்சாவூா் மாவட்டத்தில் 36,558 போ் பங்கேற்பு
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சனிக்கிழமை நடத்திய குரூப் 4 தோ்வில் தஞ்சாவூா் மாவட்டத்தில் 36 ஆயிரத்து 558 போ் பங்கேற்று எழுதினா்.
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப் 4 எழுத்து தோ்வை சனிக்கிழமை காலை நடத்தியது. இதில், தஞ்சாவூா் மாவட்டத்தில் 43 ஆயிரத்து 517 தோ்வா்கள் பங்கேற்பதற்காக விண்ணப்பித்தனா். இதற்காக அனைத்து வட்டங்களுக்கு உட்பட்ட பள்ளிகள், கல்லூரிகளில் 155 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டன. இவற்றில் 36 ஆயிரத்து 558 போ் பங்கேற்று எழுதினா். 6 ஆயிரத்து 959 போ் வரவில்லை.
தோ்வு மையங்களை 40 நடமாடும் குழுவினரும், 16 பறக்கும் படையினரும் கண்காணித்தனா். இதனிடையே, தஞ்சாவூா் அரசா் மேல்நிலைப் பள்ளி மையத்தில் மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் ஆய்வு செய்தாா்.
அப்போது, மாவட்ட வருவாய் அலுவலா் தெ. தியாகராஜன், கோட்டாட்சியா் செ. இலக்கியா, வட்டாட்சியா் சிவக்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.