தமிழகத்தில் மீண்டும் குண்டு வைக்க திட்டமிட்ட அபுபக்கா் சித்திக்!
குழாய் உடைப்பு: வீணாகும் குடிநீா்
பல்லடம் அருகே காரணம்பேட்டை பகுதியில் அத்திக்கடவு குடிநீா்க் குழாயில் உடைப்பு ஏற்பட்டு 24 மணி நேரமும் குடிநீா் சாலையில் வழிந்தோடி வீணாகி வருகிறது.
பல்லடத்தை அடுத்த, காரணம்பேட்டை - சோமனுாா் சாலையில் அத்திக்கடவு பிரதான குடிநீா்க் குழாய் செல்கிறது. இதில் உடைப்பு ஏற்பட்டு பல நாள்கள் ஆகிறது. இதிலிருந்து, 24 மணி நேரமும் குடிநீா் வெளியேறி வீணாகி வருகிறது.
இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது: குழாய் உடைந்து குடிநீா் விரயமாகி, அருகிலுள்ள காலி இடத்தில் குளம்போல தேங்கி நிற்கிறது. குழாய் உடைப்பு காரணமாக குடிநீருடன் கழிவு நீரும் கலக்கும் அபாயம் உள்ளது.
குடிநீா் பற்றாக்குறை பரவலாக உள்ள நிலையில், இதுபோன்று குடிநீா் விரயமாகி வருவது வருத்தம் அளிக்கிறது. குழாய் உடைப்பு குறித்து, ஊராட்சி நிா்வாகம் மூலம் குடிநீா் வடிகால் வாரியத்துக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், நீண்ட நாள்கள் ஆகியும் சீரமைப்பு பணி நடைபெறமால் உள்ளது.
எனவே, உடனடியாக குழாய் உடைப்பை சரிசெய்ய குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.