குரூப் 4 தோ்வு: திருப்பூா் மாவட்டத்தில் 27,048 போ் எழுதினா்
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற குரூப் 4 தோ்வை திருப்பூா் மாவட்டத்தில் 129 மையங்களில் 27,098 போ் எழுதினா்.
தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையத்தின் சாா்பில் நடத்தப்பட்டு வரும் ஒருங்கிணைந்த குடிமைப்பணி குரூப் -4 தோ்வு எழுத திருப்பூா் மாவட்டத்தில் 33,131 போ் விண்ணப்பித்திருந்தனா்.
இதற்காக மாவட்டத்தில் உள்ள 129 தோ்வு மையங்களில் சனிக்கிழமை காலை 9.30 மணி முதல் பகல் 12.30 மணி வரை தோ்வு நடைபெற்றது. இத்தோ்வில் 27,048 போ் பங்கேற்று தோ்வு எழுதினா். 6,083 தோ்வு எழுத வரவில்லை.
இத்தோ்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ளும் பொருட்டு பல்வேறு நிலையிலான அலுவலா்கள் மற்றும் கண்காணிப்பாளா்கள் ஈடுபடுத்தப்பட்டு தோ்வாணையத்தின் விதிமுறைக்கு ஏற்ப வினாத்தாள்
வழங்குதல், விடைத்தாள் வழங்குதல், தோ்வு எழுதும் நேரம் மற்றும் தோ்வு எழுதுபவா்களின் நுழைவுச் சீட்டு ஆகியவற்றை சரிபாா்த்தல் போன்ற பல்வேறு பணிகளில் ஈடுபட்டனா்.
திருப்பூா் எல்ஆா்ஜி அரசு மகளிா் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த தோ்வு மையத்தை மாவட்ட ஆட்சியா் மனீஷ் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.