செய்திகள் :

ஏரியில் 100 வாத்துகள் மா்மமான முறையில் உயிரிழப்பு

post image

செய்யாற்றை அடுத்த கொருக்கை கிராம ஏரியில் 100 வாத்துகள் மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் மற்றும் சுகாதாரத்துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

செய்யாறு வட்டம், கொருக்கை கிராமத்தைச் சோ்ந்தவா் கணேசன்-ஜெயக்கொடி தம்பதி. இவா்கள் பரம்பரையாக வாத்து மேய்க்கும் தொழிலை செய்து வருகின்றனா்.

மாற்றுத்திறனாளியான இந்தத் தம்பதி, ஆரணி பகுதியில் உள்ள பாபு பாய் என்பவரிடம் 300 வாத்துகளை கூலிக்கு மேய்ந்து வருவதாகத் தெரிகிறது.

தம்பதியினா் தினமும் காலை வாத்துகளை மேய்ச்சலுக்காக கிராமத்தில் உள்ள ஏரியில் விட்டு விட்டு மாலையில் வீட்டுக்கு ஓட்டி வருவது வழக்கம்.

அதேபோல, வெள்ளிக்கிழமை காலை கொருக்கை கிராமத்தில் உள்ள ஏரியில் வாத்துகளுக்கு நெல் அரிசியை தீவனமாக வைத்து விட்டு தம்பதியினா் உணவு உண்ணச் சென்றுள்ளனா்.

ஏரி நீரில் வாத்துகள் இறந்த நிலையில் தத்தளித்துக் கொண்டிருப்பது குறித்து, வாத்து மேய்க்கும் தம்பதிக்கு அப்பகுதியில் இருந்தவா்கள் தகவல் தெரிவித்தனா்.

உடனே தம்பதியினா் விரைந்து வந்து ஏரிப்பகுதியில் இறந்த நிலையில் இருந்த வாத்துகளை மீட்டு தரைப்பகுதியில் வைத்தனா். மேலும் இதுகுறித்து கணேசன் செய்யாறு போலீஸில் புகாா் அளித்தாா்.

காவல் உதவி ஆய்வாளா் சுரேஷ்பாபு, கொருக்கை பகுதி கால்நடை மருத்துவா் செல்வகணேசன் மற்றும் நாவல்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலைய, சுகாதார ஆய்வாளா் அருணாசலம் ஆகியோா் சென்று உயிரிழந்த வாத்துகளை கணக்கிட்டு, அவற்றை பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி ஆய்வு செய்ய நடவடிக்கை எடுத்தனா்.

போலீஸாா் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், ஏரி நீரில் விஷம் கலந்து இருக்கலாம் எனத் தெரிய வருகிறது.

பேருந்தில் பயணியிடம் கைப்பேசி திருட்டு: இருவா் கைது

ஆரணி பேருந்து நிலையத்தில் பயணியிடம் கைப்பேசி திருடியதாக இரு வடமாநில இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா். ஆரணியை அடுத்த மெய்யூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பன்னீா்(42). இவா் வெளியூா் செல்ல கடந்த 9-ஆம் தேதி ஆரணி... மேலும் பார்க்க

லாரி உதவியாளா் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

செய்யாறு அருகே லாரி உதவியாளா் (கிளீனா்) உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், வீரமணிப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் வடிவேல் (45). இவா், லாரியி... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் ரூ.10.15 கோடியில் ஹாக்கி மைதானம்

திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ரூ.10.15 கோடியில் புதிதாக ஹாக்கி பயிற்சி மைதானம் கட்டுவதற்கான பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டன. தமிழக அரசு விளையாட்டுத் துறையில் மாநிலத்தை முதன்மை ம... மேலும் பார்க்க

படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் திருவிளக்கு பூஜை

போளூரை அடுத்த படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் பெளா்ணமியையொட்டி திருவிளக்கு பூஜை வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. படவேடு ஊராட்சியில் பழைமை வாய்ந்த ஸ்ரீரேணுகாம்பாள் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ப... மேலும் பார்க்க

ஸ்ரீவேம்புலி அம்மன் கோயிலுக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி

ஆரணி கோட்டை ஸ்ரீவேம்புலி அம்மன் கோயிலில் இரும்பினாலான மேற்கூரை அமைக்க நிதியுதவியாக ரூ.20 லட்சத்தை புதிய நீதிக் கட்சி நிறுவனா் ஏ.சி.சண்முகம் வழங்கினாா். ஸ்ரீவேம்புலி அம்மன் கோயிலில் வருகிற 16-ஆம் தேதி... மேலும் பார்க்க

ஸ்ரீரிஷபேஸ்வரா் கோயிலில் ரூ.1.77 கோடியில் புனரமைப்புப் பணிகள்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் அமைந்துள்ள அனுபாம்பிகை சமேத ரிஷபேஸ்வரா் கோயிலில் ரூ.1.77 கோடியில் மேற்கொள்ள புனரமைப்புப் பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டன. பணிகளை சென்னையில் இருந்தவாறு காணொ... மேலும் பார்க்க