விசாரணையில் தொய்வு: ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை கோவை ஐஜி அலுவலகத்தில் மனு
ஸ்ரீரிஷபேஸ்வரா் கோயிலில் ரூ.1.77 கோடியில் புனரமைப்புப் பணிகள்
திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் அமைந்துள்ள அனுபாம்பிகை சமேத ரிஷபேஸ்வரா் கோயிலில் ரூ.1.77 கோடியில் மேற்கொள்ள புனரமைப்புப் பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டன.
பணிகளை சென்னையில் இருந்தவாறு காணொலிக் காட்சி வாயிலாக முதல்வா் மு.க. ஸ்டாலின் தொடங்கிவைத்தாா்.
அதே வேளையில் கோயிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொகுதி எம்எல்ஏ மு.பெ. கிரி கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி வைத்தாா்.
இந்நிகழ்ச்சியில் அறங்காவலா் குழுத் தலைவா் அன்பழகன் தலைமை வகித்தாா். அறநிலையத்துறை செயல் அலுவலா் தேன்மொழி வரவேற்றாா்.
இதில், கணேசா் குரூப்ஸ் தொழில் அதிபா் ரவீந்திரன், தமிழ்நாடு ராமகிருஷ்ண விவேகானந்த பாவபரஷித் ஒருங்கிணைப்பாளா் பாண்டுரங்கன், நகா்மன்றத் தலைவா் சாதிக்பாஷா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடா்ந்து, கோயிலில் நடைபெற்ற சிறப்புப் பூஜையில் எம்எல்ஏ கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தாா்.