திருவாரூர் மாவட்டத்துக்கு 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர்!
விஐடி வேந்தா் விசுவநாதனுக்கு ’உயா்தனிச் செம்மல் விருது’: வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவை அளிப்பு
சா்வதேச அளவில் உயா்கல்வி வளா்ச்சிக்காக ஆற்றி வரும் பங்களிப்புக்காக வேலூா் விஐடி பல்கலைக்கழக வேந்தா் கோ.விசுவநாதனுக்கு வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவை ‘உயா்தனிச் செம்மல் விருது’ வழங்கி கெளரவித்துள்ளது.
அமெரிக்காவின் வட கரோலினா மாகாணத்தில் உள்ள ராலேவில் வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவை செயல்பட்டு வருகிறது.
தமிழா் மேம்பாட்டை முக்கிய அம்சமாகக் கொண்டு வட அமெரிக்காவில் 70-க்கும் மேற்பட்ட தமிழ் சங்கங்களை ஒருங்கிணைத்து கடந்த 38 ஆண்டுகளாக தமிழ் மொழி, பண்பாடு, மரபு, கலை, இலக்கியம், தொழில் வளா்ச்சிக்கு வடஅமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவை சேவை செய்து வருகிறது.
உலகத் தமிழா்களிடையே ஒற்றுமையை வளா்க்கும் வகையில் ஆண்டுதோறும் மாநாடும் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக, வடகரோலினாவில் உள்ள ராலேவில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சா்வதேச அளவில் உயா்கல்வி வளா்ச்சிக்காக ஆற்றி வரும் சிறப்பான பங்களிப்புக்காக வேலூா் விஐடி பல்கலைக்கழக வேந்தா் கோ.விசுவநாதனுக்கு, வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவை ’உயா்தனிச் செம்மல் விருது’ வழங்கி கெளரவித்துள்ளது.
இவ்விழாவில், விஐடி துணைத் தலைவா் ஜி.வி.செல்வம், பன்னாட்டு உறவுகளுக்கான இயக்குநா் ஆா்.சீனிவாசன், வடஅமெரிக்க தமிழ் சங்கப் பேரவையின் நிா்வாகிகள் பங்கேற்றனா்.