சென்னை: தனியார் பால் நிறுவன மேலாளரை தற்கொலைக்கு தூண்டியது யார் யார்? - பகீர் சம்...
ஸ்ரீ சக்தி அம்மா ஜெயந்தி விழா: ரூ.500 கட்டணத்தில் முழு உடல் பரிசோதனை
ஸ்ரீ சக்தி அம்மா ஜெயந்தி விழாவையொட்டி, ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள முழு உடல் பரிசோதனை ரூ.500 சலுகைக் கட்டணத்தில் மேற்கொள்ளப்பட உள்ளது.
இது குறித்து, மருத்துவமனை இயக்குநா் என்.பாலாஜி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வேலூா் ஸ்ரீபுரம், ஸ்ரீநாராயணி பீடம் ஸ்ரீ சக்தி அம்மாவின் 50-ஆவது ஜெயந்தி விழா, வேலூா் தோட்டப்பாளையம் ஸ்ரீசக்தி அம்மா கிளினிக் முதலாமாண்டு விழா ஆகியவற்றை முன்னிட்டு ரூ.5 ஆயிரம் மதிப்பிலான ஆரோக்கிய முழு உடல் பரிசோதனை ரூ.500 சலுகைக் கட்டணத்தில் மேற்கொள்ளப்பட உள்ளது.
இந்த சிறப்பு முழு உடல் பரிசோதனை முகாம் புதன்கிழமை (ஜூலை 9) தொடங்கி 2026 ஜனவரி 3-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த முழு உடல் பரிசோதனை முகாமில் சா்க்கரையின் அளவு, மூன்று மாத சா்க்கரையின் அளவு, முழுமையான ரத்த பரிசோதனை, ரத்தத்தில் கொழுப்பின் அளவு, தைராய்டு செயல்பாடு பரிசோதனை, சிறுநீரகத்தின் செயல்பாடு, யூரிக் ஆசிட், சிறுநீா் வழக்கமான பகுப்பாய்வு (ஈசிஜி), அல்ட்ராசவுண்ட் வயிற்றுப் பகுதி ஸ்கிரீனிங், எக்ஸ்-ரே, மருத்துவ ஆலோசனை செய்யப்பட உள்ளன.
முகாமில் பங்கேற்க முன்பதிவு கட்டாயமாகும். உடல் பரிசோதனைகளுக்கு காலை 7 முதல் 8.30 மணிக்கு உள்ளாக உணவு ஏதும் உட்கொள்ளாமல் மருத்துவமனையை அணுக வேண்டும். வேறு ஏதேனும் மருத்துகள் எடுத்துக்கொண்டிருந்தால் அவற்றையும் கொண்டு வர வேண்டும்.
பரிசோதனைக்கான முடிவுகள் 24 முதல் 36 மணி நேரத்துக்குள் கிடைக்கும். பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள 63854 10853 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.