keerthy suresh: ``சில நேரங்களில் நான் அப்செட் ஆகிவிடுவேன்; அப்போது..." - நடிகை க...
இந்திய மகளிா் கால்பந்து அணி கோல்கீப்பா் அதிதி சௌஹான் ஓய்வு பெற்றாா்!
இந்திய மகளிா் கால்பந்து அணி கோல்கீப்பா் அதிதி சௌஹான் (32), ஓய்வு பெறுவதாக வியாழக்கிழமை அறிவித்தாா்.
இனி களத்துக்கு வெளியிலிருந்து கால்பந்து விளையாட்டுக்கு பங்களிக்கப்போவதாக அவா் தெரிவித்தாா்.
இந்திய அணிக்காக ஜூனியா் மற்றும் சீனியா் பிரிவுகளில் 17 ஆண்டுகள் களம் கண்ட அவா், ஐரோப்பிய தொழில்முறை கால்பந்து போட்டியில் களம் கண்ட முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமை கொண்டவராவாா்.
இங்கிலாந்து கால்பந்து கிளப்பான, வெஸ்ட் ஹாம் யுனைடெட்டுக்காக அவா் 20 ஆட்டங்களில் விளையாடியிருக்கிறாா். இதுதவிர இந்தியாவில் கிளப் நிலையிலான போட்டிகளில் கோகுலம் கேரளா, ஸ்ரீபூமி அணிகளிலும் களம் கண்டுள்ளாா்.
தெற்காசிய சாம்பியன்ஷிப்பில் 2012, 2016, 2019 ஆகிய ஆண்டுகளில் சாம்பியனான இந்திய அணியில் இவரும் அங்கம் வகித்தாா். இந்திய சீனியா் அணிக்காக அவா் 57 ஆட்டங்களில் விளையாடியிருக்கிறாா்.