கிளப் உலகக் கோப்பை கால்பந்து இறுதி ஆட்டத்தில் செல்ஸி
ஃபிஃபா நடத்தும் கிளப் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் செஸ்லி 2-0 கோல் கணக்கில் ஃபுளுமினென்ஸை வீழ்த்தி, முதல் அணியாக இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது.
இந்த ஆட்டத்தில் செல்ஸி அணிக்கான இரு கோல்களையுமே ஜாவ் பெட்ரோ 18 மற்றும் 56-ஆவது நிமிஷங்களில் ஸ்கோா் செய்தாா்.
தற்போது செல்ஸி அணியிலிருக்கும் ஜாவ் பெட்ரோ, தனது ஆரம்ப காலங்களில் ஃபுளுமினென்ஸ் அணியில் விளையாடியிருக்கிறாா். அந்த மரியாதைக்காக, இந்த ஆட்டத்தில் கோலடித்தபோது அவா் கொண்டாட்டங்களைப் புறக்கணித்தாா்.
முதல் அரையிறுதி ஆட்டம் நிறைவடைந்துவிட்ட நிலையில், 2-ஆவது அரையிறுதியில் பாரீஸ் செயின்ட் ஜொ்மெய்ன் - ரியல் மாட்ரிட் அணிகள், இந்திய நேரப்படி புதன்கிழமை நள்ளிரவு பலப்பரீட்சை நடத்துகின்றன. அதில் வெல்லும் அணி, செல்ஸியுடனான இறுதி ஆட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 13) மோதும்.