டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத தாமதமாக வந்தவர்களுக்கு அனுமதி மறுப்பு: கதறி அழுத சோகம்!
நேபாள கிரிக்கெட் வீரர்களுக்கு இந்தியாவில் பயிற்சி!
நேபாள நாட்டைச் சேர்ந்த 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் வீரர்களுக்கு, மத்தியப் பிரதேசத்தின் தலைநகர் போபாலில், ஒரு மாத காலத்துக்கு உயர்மட்ட தொழில்முறை பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்திய தூதரின், நேபாள இளைஞர்களுக்கான கிரிக்கெட் ஃபெல்லோஷிப் திட்டத்தின் அடிப்படையில், நேபாளத்தின் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் வீரர்களுக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கப்படும் என கடந்த ஜூன் மாதம் இந்தியத் தூதரகம் அறிவித்திருந்தது.
இந்நிலையில், நேபாளத்துக்கான இந்தியத் தூதர் நவீன் ஸ்ரீவஸ்தவா, அந்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்கள் நரேன் பட்டா, சாஹில் படேல் மற்றும் பூஜா மஹாத்தோ ஆகியோரை இன்று (ஜூலை 11) நேரில் சந்தித்துள்ளார். இந்தச் சந்திப்பில், நேபாள கிரிக்கெட் ஆணையத்தின் தலைவர் சாதூர் பஹதூர் சந்தாவும் பங்கேற்றுள்ளார்.
Ambassador @IndiaInNepal met the three U-19 Nepali boys and girl cricketers who are travelling to Bhopal, for a month long high-level professional training at LB Shashtri Cricket Shaala under the ‘Ambassador’s Cricket Fellowship for Nepali Youth’ announced by @IndiaInNepal in… pic.twitter.com/PWVAw00sh8
— IndiaInNepal (@IndiaInNepal) July 11, 2025
இதையடுத்து, அந்த விளையாட்டு வீரர்கள் அனைவருக்கும் போபாலின் எல்.பி. சாஸ்திரி கிரிக்கெட் பயிற்சி மையத்தில், வரும் ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வரையில் பயிற்சி அளிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதுகுறித்து, வெளியான அறிக்கையில், இந்தியத் தூதரகத்தின் இந்த முயற்சி, நேபாளத்தின் இளம் கிரிக்கெட் திறமைகளின் வளர்ச்சியை ஆதரிப்பதாகவும், இருநாட்டு மக்களுக்கும் இடையிலான பகிரப்பட்ட கிரிக்கெட் ஆர்வத்தின் மூலம், உறவுகளை வலுப்படுத்தக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.
It is reported that under-19 cricketers from Nepal will be provided with high-level professional training for a month in Bhopal, the capital of Madhya Pradesh.
இதையும் படிக்க: லார்ட்ஸில் 5 விக்கெட்டுகள் வீழ்த்திய பும்ரா; இங்கிலாந்து 387 ரன்களுக்கு ஆட்டமிழப்பு!