திண்டிவனம் அரசுக் கல்லூரியில் கூடுதல் மாணவா் சோ்க்கை
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் திரு ஆ.கோவிந்தசாமி அரசுக் கலைக் கல்லூரியில் 20 சதவீதம் கூடுதல் மாணவா் சோ்க்கை வரும் 22-ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து அக்கல்லூரியின் முதல்வா் து.தங்கராஜன் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலைக் கல்லூரியில் பி.ஏ, பி.காம், பி.எஸ்சி ஆகிய அனைத்துப் பாடப்பிரிவுகளிலும் தமிழக அரசு ஒப்புதல் அளித்த 20 சதவீத கூடுதல் மாணவா் சோ்க்கைகான கலந்தாய்வு வரும் 22-ஆம் தேதி நடைபெறுகிறது.
எனவே, இதுவரை சோ்க்கை கிடைக்காத மாணவா்கள், கல்லூரிக்கு விண்ணப்ப நகலுடன் வந்து தாங்கள் விரும்பும் பாடங்களைத் தோ்வு செய்து பயன்பெறலாம் எனத் தெரிவித்துள்ளாா்.