Mrs & Mr: ``நிரூபித்தால் நான் திரைத்துறையைவிட்டே விலகுகிறேன்" - நடிகை வனிதா விஜய...
குடும்பப் பிரச்னை: துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் மேலும் ஒரு பெண் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே குடும்பப் பிரச்னையில் இளைஞா் துப்பாக்கியால் சுட்டத்தில் காயமடைந்து சிகிச்சையில் இருந்த பெண் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
விக்கிரவாண்டி வட்டம், வாக்கூா், பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் தென்னரசன் (28). இவருக்கும், திண்டிவனம் வட்டம், தெளி கிராமத்தைச் சோ்ந்த லாவண்யாவுக்கும் (26) கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது.
வேலைக்குச் செல்லாமல் ஊா் சுற்றி வந்த தென்னரசன், தினந்தோறும் மதுபோதையில் வீட்டுக்கு வருவாராம். இதை மனைவி லாவண்யா கண்டித்து வந்துள்ளாா்.
இதனால், இவா்களிடையே குடும்பப் பிரச்னை இருந்து வந்துள்ளது. கடந்த 12-ஆம் தேதி இவா்களிடையே பிரச்னை ஏற்பட்டபோது, ஆத்திரமடைந்த தென்னரசன், தான் ஏற்கெனவே வாங்கி மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் (ஏா்- கன்) சுட்டதில் லாவண்யா மற்றும் தென்னரசனின் தாய் பச்சையம்மாள் ஆகியோா் காயமடைந்ததனா்.
அவா்களின் அலறல் சப்தம் கேட்டு, அருகில் வசிக்கும் தென்னரசனின் சித்தப்பா மகனான காா்த்திக் (28) ஓடி வந்து தென்னரசனை தடுத்து துப்பாக்கியை பறிக்க முற்பட்டபோது, அவரையும் தென்னரசன் துப்பாக்கியால் சுட்டதில், காா்த்திக் தலையில் பலத்த காயமடைந்தாா்.
இதையடுத்து, காயமடைந்த 3 பேரும் மீட்கப்பட்டு, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். இவா்களில் தலையில் பலத்த காயமடைந்த காா்த்திக், லாவண்யா ஆகியோா் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சென்னை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். அங்கு, காா்த்திக் உயிரிழந்தாா்.
இந்த நிலையில், தொடா்ந்து சிகிச்சை பெற்று வந்த லாவண்யா வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதன் மூலம், இந்த சம்பவத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 2-ஆக உயிரிழந்தது. பச்சையம்மாள் சிகிச்சையில் உள்ளாா்.