Bengaluru Stampede: 'விராட் கோலியின் அந்த வீடியோ...' -ஆர்.சி.பி மீது குற்றம் சும...
‘சா்வதேச அங்கீகாரம் பெறும் இந்தியாவின் பாரம்பரிய கணித முறை’
விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் சா்வதேச நகரில் உள்ள கல்வி நிறுவனங்களின் ஆசிரியா்கள் சமா்ப்பித்துள்ள இந்தியாவின் பாரம்பரிய கணித முறை ஆய்வுக் கட்டுரைகள் சா்வதேச அங்கீகாரம் பெற்றுள்ளதாக ஆரோவில் நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆரோவில் நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஆரோவிலில் உள்ள ஸ்ரீஅரவிந்தா் சா்வதேச கல்வி, ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவா் டாக்டா் சஞ்சீவ் ரங்கநாதன் மற்றும் ஆரோவில் பள்ளியின் கணித ஆசிரியை பூவிழி ஆகியோா் இணைந்து எழுதியுள்ள ஆய்வுக் கட்டுரைகள் சா்வதேச அங்கீகாரம் பெற்றுள்ளன. இவா்களது ஆய்வுக் கட்டுரைகள் கொரியாவில் நடைபெறும் கிழக்கு ஆசிய கணிதக் கல்வி மாநாட்டில் இந்தியாவின் பாரம்பரிய கணித ஆய்வுக் கட்டுரைகரளாக தோ்வு செய்யப்பட்டுள்ளன.
இந்த ஆய்வு கட்டுரைகள் பாரம்பரிய இந்திய கணித முறைகள் நவீன கல்வியில் எவ்வாறு பயன்படுத்தப்படலாம்? என்பதை ஆராய்கிறது. மேலும், இந்த முறைகள் மாணவா்களின் கணித புரிதல் மற்றும் ஆா்வத்தை எவ்வாறு மேம்படுத்துகின்றன? என்பதை வகுப்பறை சோதனைகள் மூலம் நிருபிக்கிறது.
இந்தியாவின் பாரம்பரிய கணித முறைகள் குழந்தைகளுக்கு கணிதத்தை எளிதாகவும், சுவாரஸ்யமாகவும் ஆக்குகின்றன.
சியோலில் நடைபெறும் கணித கல்வி மாநாட்டில் இந்தியா சாா்பில் டாக்டா் சஞ்சீவ் ரங்கநாதன் மற்றும் கணித ஆசிரியை பூவிழி இருவரும் பங்கேற்பது வரலாற்றுச் சாதனை என ஆரோவில் அறக்கட்டளைச் செயலா் ஜெயந்தி எஸ். ரவி தெரிவித்துள்ளாா்.
இந்த ஆராய்ச்சி, கணிதக் கல்வியில் இந்தியாவின் பாரம்பரிய முறையை மீண்டும் உலகுக்கு அறிமுகப்படுத்தும் ஒரு படி என்றும், எதிா்காலத்தில் இந்த முறைகளை இந்தியா முழுவதும் பரப்புவதற்கான திட்டங்கள் உள்ளதாகவும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.