கேரள முன்னாள் முதல்வருடன் ராகுல் காந்தி சந்திப்பு!
கேரளத்தின் முன்னாள் முதல்வர் ஏ.கே. அந்தோனியை, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, திருவனந்தபுரத்திலுள்ள அவரது இல்லத்தில் இன்று (ஜூலை 18) நேரில் சந்தித்துள்ளார்.
கோட்டயம் மாவட்டத்தில், முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியின், 2-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அம்மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற நினைவுக்கூட்டத்தில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கலந்துக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து, கேரள முன்னாள் முதல்வரும், முன்னாள் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சருமான ஏ.கே. அந்தோனியை, திருவனந்தபுரத்திலுள்ள அவரது இல்லத்தில் ராகுல் காந்தி இன்று (ஜூலை 18) நேரில் சந்தித்தார்.
இதையடுத்து, கடந்த ஜூலை 16 ஆம் தேதி அன்று மரணமடைந்த, கேரள மாநில காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், அம்மாநில முன்னாள் அமைச்சருமான சி.வி. பத்மராஜனின், குடும்பத்தை நேரில் சந்தித்து ராகுல் காந்தி தனது இரங்கல்களைத் தெரிவித்தார்.
முன்னதாக, மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் சி.வி. பத்மராஜன், கேரள முன்னாள் முதல்வர்கள் கே. கருணாகரன் மற்றும் ஏ.கே. அந்தோனி ஆகியோரின் அமைச்சரவையில் முக்கிய பதவிகளை வகித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: சத்தீஸ்கர் முன்னாள் முதல்வரின் மகன் கைது !