சரிவில் பங்குச்சந்தை! 600 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!
பங்குச்சந்தைகள் இன்று(வெள்ளிக்கிழமை) சரிவுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை
82,193.62 என்ற புள்ளிகளில் தொடங்கியது. காலை 11.45 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 601.34 புள்ளிகள் குறைந்து 81,657.91 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. கடந்த மூன்று வாரங்களில் சென்செக்ஸ் 2,400 புள்ளிகளுக்கு மேல் சரிந்துள்ளது.
அதேபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி தற்போது 171.05 புள்ளிகள் குறைந்து 24,940.40 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. நிஃப்டி 25,000 புள்ளிகளுக்குக் கீழ் குறைந்துள்ளது.
ஆக்சிஸ் வங்கி, பாரதி ஏர்டெல், கோடக் வங்கி ஆகியவற்றின் பங்குகள் கடும் சரிவைச் சந்தித்தன.
நிஃப்டியில் மீடியா, மெட்டல் தவிர, நிதி சேவைகள், எஃப்எம்சிஜி, பார்மா, தனியார் வங்கி என அனைத்து துறை குறியீடுகளும் சரிவைச் சந்தித்துள்ளன.
ஆக்சிஸ் வங்கி, என்விரோ இன்ஃப்ரா, எச்டிஎஃப்சி வங்கி, ஜியோ பைனான்சியல், பாலிகேப் இந்தியா உள்ளிட்ட ஒரு சில நிறுவனங்களின் பங்குகள் லாபமடைந்தன.
பிஎஸ்இ மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் தலா 0.5 சதவீதம் சரிந்தன.